Saturday, December 18, 2010

vanni

'மக்கள், சுதந்திரத்தை வென்றடைய வேண்டும் என்று விரும்பும்போது,

ஆகாய விமானத்தைக் கல் எறிந்து வீழ்த்துவார்கள்.

ராணுவ டேங்குகளை வெறும் கையால் திருப்பு வார்கள்!’

Wednesday, September 1, 2010

விடுதலைப் புலிகள் ஒரு அரசியல் அமைப்பே!-நியூஸி. உச்ச நீதிமன்றம்




விடுதலைப் புலிகள் ஒரு அரசியல் அமைப்பே!-நியூஸி. உச்ச நீதிமன்றம்

ஆக்லாந்து: இறைமை உள்ள ஒரு இனத்துக்காகப் போராடிய தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் [^] அமைப்பு ஒரு அரசியல் அமைப்பே. அதன் உறுப்பினர்களுக்கு அடிப்படை உரிமையை மறுக்கக் கூடாது என நியூசிலாந்து உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.

1992-ல் புலிகளுக்கு ஆயுதம் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்றை இந்திய கப்பல் படை இடைமறித்து சென்னை நோக்கி செலுத்தி வந்தது. இதில்தான் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கிட்டு இருந்தார்.

சென்னைக்கு அருகில் இந்தக் கப்பல் கொண்டுவரப்பட்டதும் கப்பல், அதிலிருந்த ஆயுதங்கள் மற்றும் புலிகள் அமைப்பின் தலைவர்களை சிறைப்படுத்த இந்திய கப்பல் படையினர் முயன்றபோது, கப்பலை வெடி வைத்துத் தகர்த்தனர் புலிகள். இதில் கிட்டு உள்ளிட்டோர் இறந்தனர். மூவர் மட்டும் கடலில் குதித்துத் தப்பினர்.

அவர்களை இந்தியா கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியது. பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் அவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

2001-ல் தண்டனை முடிந்ததும், அவர்களை சிங்கப்பூருக்கு அனுப்பியது இந்தியா. பின்னர் அவர்கள் சிங்கப்பூரிலிருந்து நியூஸிலாந்துக்கு சுற்றுலா விசாவில் சென்றனர். 2002-ல் அகதி உரிமை கோரி அங்கு விண்ணப்பித்தனர்.

ஆனால் இதனை நிராகரித்த நியூஸிலாந்து அரசு அவர்களில் இருவரை நாடு கடத்தியது. மூன்றாமவர் மட்டும் அரசின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த நியூஸிலாந்து நீதிமன்றம் மேற்கண்ட முன்னுதாரணமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

அகதி அந்தஸ்து கோரிய நபர், புலிகளின் ஆயுதக் கப்பலை செலுத்திய மாலுமி என்றும், தனது செயலை அதை ஒப்புக்கொள்வதாகவும் அரசு தாக்கல் செய்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவருக்கு இந்திய அரசு வழங்கிய தண்டனை மற்றும் இந்திய நீதிமன்றங்களின் தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டி அகதி உரிமையை மறுத்தது நியூஸிலாந்து அரசு.

இதனை விசாரித்த நீதிபதி, இலங்கை அரசு இன அழிப்பில் ஈடுபடும் பட்சத்தில் தமிழர்கள் [^] தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உரிமை படைத்தவர்களே என்று குறிப்பிட்டார். மேலும் இந்திய நீதிமன்றத் தீர்ப்புகளையும் அவர் இந்த விசாரணையின் ஒரு அங்கமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று நிராகரித்து விட்டார்.

குறிப்பிட்ட அந்தக் கப்பல் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட பொருள்களை ஏற்றிச் சென்றது உண்மையாகவே இருந்தாலும், புலிகள் தங்கள் மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பு. அவர்களுக்கு அத்தியாவசியமான பொருள்களைத்தானே அந்தக் கப்பல் ஏற்றிச் சென்றது? இதில் தவறு காண வேண்டியதில்லை. அந்தக் கப்பல் புலிகளுக்குப் போய்ச் சோராத நிலையில் அவர்களாலே மூழ்கடிக்கப்பட்டுள்ளது. எனவே இதில் அரசியல் குற்றமோ, பொதுமக்களுக்கு ஊறு விளைவித்த குற்றமோ இல்லை என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அரசியல் அமைப்பு:

மேலும் தமது தீர்ப்பில், "இறைமை உள்ள இனம் என்ற அடிப்படையில் தமிழர்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள முடியும். அதற்காகவே விடுதலைப் புலிகள் போராடினர். புலிகள் ஒரு போராட்ட அமைப்பு. அது அரசியல் ரீதியாக தற்போது இயங்கி வருகிறது" என்றும் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட அந்த தமிழருக்கு நியூசிலாந்து அரசு உடனே அகதிகள் அந்தஸ்து வழங்கவேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கமாக ஆஸ்திரேலியா [^] பட்டியலிட்டபோது, நியூசிலாந்தும் அதற்கான முயற்சியில் இறங்கியது.

அப்போது நியூசிலாந்து தமிழர்கள் மேற்கொண்ட பெரும் போராட்டங்களால் அந்த முயற்சி நிறுத்தப்பட்டது. இன்று புலிகளுக்கு தடை விதிக்காத முக்கிய நாடுகளுள் நியூஸிலாந்தும் ஒன்று.

உலகில் தமிழர்கள் பெருமளவில் வாழும் பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இன்னும் புலிகள் மீது தடைகள் உள்ளன. உலகத் தமிழர்களின் தாயகமான இந்தியாவில் தடை நீடிக்கிறது.

தற்போது நியூசிலாந்தில் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை முன்னுதாரணமாகக் கொண்டு, புலிகள் இயக்கத்தை தடைசெய்துள்ள நாடுகளில் அத் தடையை நீக்கிட முயற்சிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்திய நீதிமன்றங்களின் தீர்ப்பு தவறானது என்பதை கிட்டத்தட்ட வெளிப்படையாகவே உரைத்திருக்கிறது நியூஸிலாந்து உச்ச நீதிமன்றம்.

மேலும் புலிகள் தங்கள் ஆயுதக் கப்பலை மூழ்கடித்தது, அரசியல் குற்றமோ, பொது நலனுக்கு எதிரான குற்றமோ அல்ல என தெள்ளத் தெளிவாக நியூஸிலாந்து நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. புலிகள் வல்வெட்டித் துறைக்கு கொண்டு சென்ற கப்பலை இடைமறித்தது இந்திய கப்பல் படைதான். தங்களுக்குச் சொந்தமான பொருளை புலிகள் மூழ்கடித்ததில் என்ன குற்றம் காண முடியும்? அந்த ஆயுதங்களைக் கொண்டு இந்தியாவை அவர்கள் தாக்க முயலவில்லையே என்றும் நீதிபதிகள் கருத்து வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது!

Saturday, June 6, 2009

பிரபாகரன் ராஜீவ் காந்திக்கு எழுதிய இரண்டாவது கடிதம்.



ராஜீவ் காந்திக்கு பிரபாகரன் எழுதிய இரண்டாவது கடிதம்.

இந்திய இராணுவத்திற்கும் புலிகளிற்கும் யுத்தம் தொடங்கியதும் பிரபாகரன் அவர்கள் அன்றைய இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்திக்கு 12.10.1987 அன்று முதலாவது கடிதத்தினைஎழுதியிருந்தார்.அதற்கு ராஜீவ் காந்தியிடமிருந்து எவ்வித பதிலும் வராத காரணத்தினால் மீண்டும் இரண்டு நாட்களின் பின்னர் நீண்டதொரு விளக்கக் கடிதத்தினை பிரபாகரன் அவர்கள் மீண்டும் ராஜீவ் காந்திக்கு எழுதியிருந்தார். அக்கடிதம் கீழே தருகிறேன்.


தலைமைச்செயலகம்
தமிழீழ விடுதலைப்புலிகள்
யாழ்ப்பாணம்.
14.10.1987



கனம் ராஜீவ் காந்தி அவர்கள்
இந்தியப் பிரதமர்
புதுடில்லி

கனம் பிரதம மந்திரி அவர்களே

தமிழ்ப்பகுதிகளில் சாவும் அழிவுமாக நிலைமை படு மோசமடைந்து வருவதனால் நான் மீண்டும் உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்.இந்திய அமைதி காக்கும் படையினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளினால் நெருக்கடி நிமைமை தீவிரமடைந்து வருவதுடன் யாழ்ப்பாணக்குடாநாட்டில் பொதுசன உயிரிழப்பும் பொருந்தொகையில் அதிகரித்துள்ளது.கண்மூடித்தனமான பீரங்கித்தாக்குதல்கள்.மோட்டார் எறிகணை வீச்சு. விமானக்குண்டுவீச்சு காரணமாக இதுவரை 150 அப்பாவிப் பெர்துமக்கள் அனியாயமாகக் கொல்லப்பட்டதுடன் 500 பேர்வரை காயமடைந்துள்ளனர்.அத்துடன் விடுதலைப்புலிகள் இயக்க போராளிகள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.போர்க்கைதிகளாக 18 அமைதிப்படைச் சிப்பாய்கள் எம்மது பாதுகாப்பில் உள்ளனர்.

போர் மிகவும் உக்கிரமடைந்து தீவிரமடைவதால் பல்லாயிரக்கணக்கான அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.காவரையற்ற ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்து வருவதால்அத்தியாவசிய உணவுப்பொருட்களிற்கு பெரும் தட்டுப்பாடு எழுந்துள்ளது.இதனால் எமது மக்கள் தாங்கொணாத்துன்பத்திற்கு இலக்காகியுள்ளனர். எமது மக்களின் பாதுகாப்பைப் பேணி சமாதானத்தையும் இயல்பு நிலையையும் நிலைநாட்டுவதற்காக எமது தாயகம் வந்த இந்திய அமைதிப்படையினர் ஒரு மூழு அளவிலான யுத்தத்தினை ஆரம்பித்து எமது மக்கள் மீது மனிதாபிமானமற்ற கொடுமைகளை புரிவது மிகவும் வேதனைக்குரிய துன்பியல் நிகழ்வாகும்.

11 ம் நாள் காலை இந்திய அதிரடிப்படையினர் யாழ்ப்பாண நகருக்கு சமீபமாகவுள்ள பிரம்படியில் பல்கலைக்கழக மாணவர்கள் .பெண்கள் குழந்தைகளென 40 அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்துள்ளனர்.மக்களிற்கு சேவை செய்யும் பொது நிறுவனங்கள் மீதும் இந்திய அமைதிப்படைகள் தாக்குதல் நடத்தியமை எமக்கு அதிர்ச்சியை தந்திருக்கின்றது.ஈழமுரசு . முரசொலி ஆகிய இரு தினசரிதமிழ்ப் பத்திரிகை காரியாலயத்தினுள் புகுந்துஅமைதிப்படை சிப்பாய்கள் வெடிகுண்டுகளை வைத்து அச்சு இயந்திரங்களை தகர்த்துள்ளனர்.12 நாளன்று வடமாகாணத்தின் ஒரேயொரு வைத்திய நிறுவனமான யாழ்ப்பாண மருத்துவ மனைமீது கோட்டையிலுள்ள இந்தியப்படையினர் பீரங்கித்தாக்குதலை நடத்திபெரும் சேதம் விழைவித்துள்ளனர். நேற்று விமானக்குண்டு வீச்சு காரணமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கட்டிடங்கள் பலத்த சேதத்திற்கு உள்ளாகி இருக்கின்றன.

இந்தப் போரில் கனரக ஆயுதங்களையோ விமானங்களையோ பாவிக்கவில்லையென இந்திய அரசாங்கம் பரப்புரை செய்து வருகின்றது.ஆனால்.அதேவேளை இலங்கை இந்திய விமானங்களும் உலங்குவானூர்திகளும் குடியிருப்புப் பகுதிமீது கண்மூடித்தனமான தாக்குதலை நடாத்தி வருகின்றது. இந்தியாவின் இந்த நடவடிக்கையானது எமது மக்களிற்கு அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய இலங்கை ஒப்பந்த விதிகளின் பிரகாரம் அமைதிப்படையினர் அமைதியை பேணவேண்டும்.பொது மக்களிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இதுவே அவர்களிற்கு வழங்கப்பட்ட ஆணையாகும். மக்கள் ஆணைபெற்ற ஒரு அரசியல் இயக்கத்திற்கு எதிராக ஒரு முழுஅளவிலான யுத்தத்தை தொடுப்பதற்கு அமைதிப்படைக்கு சட்டரீதியான அதிகாரம் எதுவும் இல்லை.அமைதிப்படையின் அட்டுளியங்கள் பற்றி நாம் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை விசாரித்து அறிவதற்கும்.உண்மையை உலகிற்கு எடுத்து சொல்வதற்கும் வழிசெய்யும் வகையில் சர்வதேசப்பத்திரிகையாளர்கள். மனிதஉரிமை நிறுவனப்பிரதிநிதிகள். இந்திய எதிர்க்கட்சி பிரமுகர்கள் ஆகியோரைக்கொண்ட ஒரு பார்வையாளர் குழு யாழ்ப்பாணம் வர அனுமதிக்குமாறு உங்களை வேண்டிக்கொள்கிறேன்.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஒரு இடைக்கால அரசை அமைக்குமாறு இந்திய சிறீலங்கா அரசுகள் எமது இயக்கத்தை கேட்டுக்கொண்டன என்பதை அறிவீர்கள். தமிழ் மானிலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கமே மக்கள் ஆதரவு பெற்ற முதன்மையான அரசியல் அமைப்பு என்பதை இரு அரசுகளும் அங்கீகாரம் வழங்கியமைக்கு இது ஒப்பாகும்.இடைக்கால அரசு அமைக்கப்பெற்றதும் எம்மிடம் எஞ்சியுள்ள ஆயுதங்களை கையளித்து விடுவதாக நாம் வாக்குறுதி அளித்திருந்தோம். ஆனால் கிழக்கு மாகாணத்தில் தலைதூக்கிய வன்முறைச்சம்பவங்களை சாக்காகக் காட்டி இந்திய அரசாங்கம் எமமீது ஒரு யுத்தத்தை கட்டவிழ்த்துவிட தீர்மானித்துள்ளது.இது மிகவும் துரதிஸ்டவசமானதாகும். கிழக்கு மாகாணத்தில் தலைதூக்கிய வன்முறைச்சம்பவங்களிற்கும் எமக்கும் எவ்வித தொடர்புமில்லை. இதனை நாம் திட்டமிட்டு செயற்படுத்தியதாகக் கூறுவதும் தவறானதாகும்.எமது இயக்கத்தின் திருகொணமலைத் தளபதி புலேந்திரன். முன்னாள் மட்டக்களப்பு தளபதி குமரப்பா ஆகியோரின் மரணத்தின் விளைவாகவே தன்னிச்சையாக இவ்வன்முறைசம்பவங்கள் தலைதூக்கின.

எமது தளபதிகளின் மரணத்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படலாமென நாம் ஏற்கனவே இந்தியத் தூதுவர் திரு.டிக்சித்திடம் கூறியிருந்தோம்.இதன் விளைவுகள் பற்றி திரு.டிக்சித்தும் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். எமது மக்களிற்கு தமது அரசியல் தலைவிதியை தாமே நிர்ணயித்துக்கொள்ளும் சனநாயக உரிமை இருக்கிறது. இந்த உரிமையை மீறும் வகையில் இந்தியா போன்ற ஒரு சனநாயக நாடு தனது சொந்த அபிலாசைகளை ஆயுத முனையில் எமது மக்கள் மீது திணித்துவிட முயல்வது நியாயம் ஆகாது.இந்த ஒப்பந்தம் பற்றி எமக்கு தனித்ததொரு நிலைப்பாடு இருந்தபொழுதும். எமது மக்களின் நலன் பேணப்படுமானால் அதனை அமுல்படுத்துவதில் இந்தியாவிற்கு ஒத்துளைப்பு வழங்க நாம் முன்வந்தோம்.அப்படியிரந்தும் தமிழ்மக்களின் உண்மையான பிரதிநிதிகளான எம்மை பூண்டோடு அழித்து விடுவதற்கு நீங்கள் மேற்கொண்டுள்ள ?ராணுவ நடவடிக்கை நியாயமற்றது. ஆகவே இந்த இராணுவ நடவடிக்கையை நிறுத்தி சமாதானத்தையும் இயல்பு நிலைமையையும். இன ஐக்கியத்தையும் உருவாக்க வழிகோலும் வகையில் விடுதலைப்புலிகள் இயக்த்துடன் பேச்சு வார்ததைகளை நடத்துமாறு உங்களை பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

வே.பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப்புலிகள்.

வேண்டுகோள் !!!











வன்னி மக்களின் இறுதி வேண்டுகோள் !!!

ஆயிரத்திற்கு அதிகமானோர் பலி! தெருத் தெருவாக மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் :

இறுதிப் போர் என்று வன்னியில் சிறீலங்காப் படையினர் கொலை வெறித் தாக்குதல்களை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிமுதல் நடத்தி வருகின்றனர். இத்தாக்குதல்களில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் பலர் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என அனைத்துலகத் தொடர்பகத்தின் பரப்புரைப் பொறுப்பாளர் திலீபன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தாக்குதல்கள் மத்தியிருந்தவாறே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த வாழும் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்காப் படையினர் வெள்ளைப் பொஸ்பரஸ் குண்டுத் தாக்குதல்களையும், ஆட்டிலறி எறிகணைத் தாக்குதல்களை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் பாதுகாப்பு வலயம் நாலாபுறமும் எரிந்த வண்ணம் உள்ளது. ஆயிரத்திற்கு அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் பலர் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

மருத்துவமனைகள் அனைத்தும் செயலிழந்து காணப்படுகின்றன. காயமடைந்த மக்கள் தெருத்தெருவாக இருந்து இரத்தம் சிந்திக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் எதுவுமே செய்ய முடியாது பெரும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

165,000 மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்றால் புலம்பெயர் நாடுகளில் அனைவரும் வீதியில் இறங்கிப் போராடுங்கள். போராடினால் மட்டுமே இந்த மக்களைக் காப்பாற்ற முடியும்.

165,000 மக்களில் வாழும் இப்பகுதியில் கொல்லப்படும் மக்களின் பிரேதங்களின் எண்ணத் தொடங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்.

இதுவே எமது கடைசி வேண்டுகோளாகக் கேட்டுக்கொள்கின்றோம்.....


மக்களைக்காப்பாற்ற கடைசிச்சந்தாப்பம்!


எழுச்சிகொள்ளுங்கள்!


தனது முழுப்பலத்தையும் பாவித்து இன்று வன்னிமக்களை அழித்தொழிக்கும் கடைசிப்போரில் இறங்கிவிட்டான் எதிரி. எனவே, தாமதம் வேண்டாம். வீதிக்கு இறங்குங்கள். எஞ்சியிருக்கும் மக்களைப் பாதுகாக்க இதுவே எமக்குள்ள கடைசிச் சந்தர்ப்பம்...

Tuesday, November 25, 2008

ஈழப் பெண்மணி!!!




நாடு காக்க வீறுகொண்டு
நடக்கும் பெண்மணி – உலக
ஏடு போற்ற வாழுமெங்கள்
ஈழக் கண்மணி!
காடு மேடு கடல்வானம்
கடக்கும் அம்மணி – போர்க்
களத்தில் இன்று காடையரைத்
தகர்க்கும் பொன்மணி!
ஆண்கள் போலக் கருவிகளைச்
சுமந்து செல்லுவார் - பகை
அடுத்த நொடியே வந்துவிட்டால்
வெடித்து வெல்லுவார்
தூண்கள் போன்று படையணிக்கு
வலிமை செய்யுவார் - என்றும்
துணிந்து சென்று எதிரிகளின்
துரையைக் கொய்யுவார்!
பிள்ளை குட்டி யாவும் விட்டுப்
படையில் சேருவார் - கொடும்
கொள்ளைக் கார சிங்க ளத்தான்
தடையை மீறுவார்!
மள்ளர் போன்று வீரத் தோடு
துள்ளி ஆடுவார் - தாய்
மண்ணை மீட்கும் மானப் போரில்
வாகை சூடுவார்!
கட்டு பாடு ஒழுக்கத் தையே
பற்றிக் கொள்ளுவார் - சிங்களக்
காடை யரின்வி மானத் தையே
சுட்டுத் தள்ளுவார்!
எட்டுத் திசையும் ஈழக் கொடியை
ஏற்றி வருவார் - தலைவர்
கட்ட ளையை ஏற்று வெற்றிக்
கனியைத் தருவார்!

......தனித்தமிழ் வேங்கை

Oh Tamil Inamae...


ஆண்டது போதும், கலைஞரே....







ஆண்டது போதும், கலைஞரே....

பதவியைத் தூக்கிஎறியுங்கள்.

கடைசியில் "தமிழின துரோகி" என்ற

பட்டத்துடன்வரலாற்றில் வாழ வேண்டாம்.

உங்களின் அறிவு,ஆற்றல், அரசியல்ஆளுமை

உலகத் தமிழர்கள் அனைவரும் அறிவர்.

ஆனால் தற்போது உங்களின் பதவி வெறி,

தமிழினத்திற்கேசாபம் ஆகிவிடுமோ என்ற கவலை மேலூங்குகிறது.
அரியனையைவிட்டு வெளியேறி,

உலகத்தமிழர்களின் முதல்வராக ஆகுங்கள்.

தமிழன் என்பவன் அகதியாய் வாழ்க்கையை

நடத்தியவன் என்ற வரலாற்றை ஏற்படுத்த வேண்டாம்.

மேலே உள்ள படத்தைபாருங்கள்...

மனம் வெம்புகிறது.....

தமிழனின் வரலாற்றை அன்றுபடித்து பெருமிதம் கொண்டிருந்தேன்।

இன்று அவல நிலையில்...

அநாதையை விட கேவலமாய்....???

இந்திய அரசில் பங்கு வகித்து,

தமிழ்ச் சகோதரனை சாகஅடிக்கிறீர்கள்.

பாவம்......கொடியது....அதனிலும் கொடியது,

அகதியாக்குவது.

அதைத் தெரிந்தோ/தெரியாமலோ செய்கிறீர்கள்.

பதவி சுகத்திற்காக, பாராமுகமாக இருக்காதீர்கள்....

அவன்நம் தொப்புள் கொடி உறவு.

இனியும் தாமதிக்காதீர்கள்....

அதற்குள்அநியாய,அக்கிரம இலங்கை அரசு.........

தன் மக்களையேசமாதியில் வைக்க தயங்காது.

இன்னமும் மனம் இரங்கவில்லையெனில்,

இந்தியன் என்ற பெருமையுடன் "மானாட மயிலாட" பார்த்துக் கொண்டிருங்கள்.
தமிழன் செத்துத் தொலையட்டும்....

அவன் உயிருடன்இருப்பது தானே, பிரச்சினை। கடைசி வெறி:

இந்திய அரசு ஒரே கல்லில் ,இரு காயடைத்துள்ளது।

தமிழனை சாகடிப்பது மேலும்

நிவாரண உதவி என்ற பெயரில் உலகை ஏமாற்றுவது.